பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு இன்று நேர்காணல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் வியாழக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் வியாழக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவுற்ற நிலையில் கடந்த நவம்பர் 30ஆம் தேதியோடு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை.
இதற்கிடையே மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் வலியுறுத்தியது.
இதற்கிடையே புதிய பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதற்காக கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட். மூத்த வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட மூவர் தேர்வு குழு நியமிக்கப்பட்டது. 
கேரி கிரிஸ்டன், ஹெர்ஸ்செல் கிப்ஸ், ரமேஷ் பவார், டபிள்யு வி.ராமன், மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத், டிரென்ட் ஜான்சன், மார்க் கோல்ஸ், டமிட்ரி மஸ்காரனெஸ், பிராட் ஹாக் உள்பட 28 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நேர்காணல் வியாழக்கிழமை நடக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.