முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

கிறிஸ்துமஸின் போது பாரம்பரியமாக நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட்

கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு பின் அடுத்த நாள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டம் பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படுகிறது. 

News image
Updated On :26 டிசம்பர் 2018, 2:52 am IST


கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு பின் அடுத்த நாள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டம் பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படுகிறது. 
பாக்ஸிங் டே என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்து கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். 
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்னில் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் சிறப்பு வாய்ந்ததாகும்.
பாரம்பரியமாக ஷெஃபில்ட் ஷீல்ட் போட்டி என விக்டோரியாவுக்கும்-நியூ செளத் வேல்ஸ் அணிக்கும் இடையே கிறிஸ்துமஸின் போது, மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடைபெறும். பாக்ஸிங் டே என்பதும் ஆட்ட நாள்களில் ஒன்றாகும். இதனால் நியூ செளத்வேல்ஸ் அணி வீரர்கள் தங்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியவில்லை என புகார் கூறினர்.
இதனால் மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டம் ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 
கடந்த 1950-51-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது மெல்போர்ன்ட் டெஸ்ட் டிசம்பர் 22 முதல் 27 தேதிகளில் நடைபெற்றது. அப்போது 4-ஆவது நாள் பாக்ஸிங் டே என அழைக்கப்பட்டது. இதற்கிடையே 1953 முதல் 1967 வரை மெல்போர்னில் பாக்ஸிங் டே நாளில் ஆட்டங்கள் நடக்கவில்லை. 1974-75 ஆஷஸ் தொடரில் 6 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒட்டுமொத்தமாக அட்டவணை அனைவருக்கும் பொருந்தும்படி அமைய, மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டம், பாக்ஸிங் டே தினத்தில் தொடங்கப்பட்டது.
இதற்கான உரிமையை மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்-ஆஸி. கிரிக்கெட் அணி பெற்றன. 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்றும் மற்றொரு நாட்டு கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டத்தை காண மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு (எம்சிஜி) குறைந்தது 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள். 26-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி டெஸ்ட் ஆட்டம் முடிவுறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.