ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிக்ஸர் அடித்தால் மும்பைக்கு மாறுவேன்: ரோஹித் சர்மாவைச் சீண்டிப் பார்த்த ஆஸி. கேப்டன்! (விடியோ)

2-வது நாளான இன்று ரோஹித் சர்மா விளையாடும்போது அவரைச் சீண்டியபடி இருந்தார் விக்கெட் கீப்பரும் ஆஸி. கேப்டனுமான டிம் பெயின்...

News image
Updated On :27 டிசம்பர் 2018, 9:35 am

எழில்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

2-வது நாளான இன்று ரோஹித் சர்மா விளையாடும்போது அவரைச் சீண்டியபடி இருந்தார் விக்கெட் கீப்பரும் ஆஸி. கேப்டனுமான டிம் பெயின். 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் யாருக்கு என்னுடைய ஆதரவு என்பதில் குழப்பம் ஏற்படும். இப்போது ரோஹித் சர்மா சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுவேன். நான் எல்லா அணிகளிடமும் விளையாடியுள்ளேன். நீங்களும் எல்லா அணிகளுடன் விளையாடியுள்ளீர்கள், பெங்களூரைத் தவிர.. என்று ரோஹித்தைச் சீண்டிப் பார்த்தார் பெயின். 

எனினும் இதனால் கோபமடைந்தோ அல்லது உற்சாகமடைந்தோ பந்துவீச்சைப் பதம் பார்க்க ரோஹித் சர்மா முயலவில்லை. ஏற்கெனவே டெஸ்ட் அணியில் இடம் இன்னும் நிரந்தரம் ஆகாததால் பக்குவமாக விளையாடி இந்திய அணி டிக்ளேர் செய்யும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரோஹித் சர்மா. 

இன்றைய ஆட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் இதுபற்றி கூறியதாவது:

ரோஹித் சர்மாவுடன் சிறிது நேரம் விளையாடிப் பார்த்தோம். மிட் ஆனை கொண்டுவந்தால் ஐபிஎல் நிலைக்கு மாறி சிக்ஸ் அடிக்கமுடியுமா என ரோஹித்திடம் நான் கேட்டேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.