மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டெளக் பொலிஞ்சர் ஓய்வு

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டெளக் பொலிஞ்சர் (36) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:33 pm

DIN

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டெளக் பொலிஞ்சர் (36) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
இதுவரை 12 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 50 விக்கெட்டுகளும், 39 ஒருநாள் கிரிக்கெட்டில் 62 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி முறையே 25.9 மற்றும் 23.9 ஆகும்.
ஆஸ்திரேலியாவுக்காக 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர், அதே எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் நியூ செளத் வேல்ஸ் அணிக்காக 124 ஆட்டங்களில் களம் கண்டுள்ளார்.
இந்த ஆண்டு வரையில் பிக் பாஷ் லீக் போட்டியில் விளையாடி அவர், முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 411 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக அவர் 2010 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பங்கேற்றிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.