ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

மீண்டும் சர்ச்சைக்குள்ளான சச்சின் மகள்: மென்பொருள் பொறியாளர் கைது

சச்சின் டெண்டுல்கர் மகளின் பெயரில் போலி ட்விட்டர் பக்கம் ஏற்படுத்திய மென்பொருள் பொறியாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Published On :

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பெயரில் போலியான ட்விட்டர் பக்கம் ஏற்படுத்தி அதில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வந்த மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நிதின் சிஷோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பெயரில் ட்விட்டர் பக்கம் ஏற்படுத்தி அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவேற்றியுள்ளார். இதன்காரணமாக அந்தேரி காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர், தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாக சாரா டெண்டுல்கரிடம் அவதூறாகப் பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறை அந்த நபரைக் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.