சிக்ஸர் மழை: நியூஸிலாந்து 243 ரன்கள் குவிப்பு! கப்தில் அபார சதம்!
டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்துள்ளது...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்லாந்தில் நடைபெற்று வரும் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்துள்ளது.
நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 49 பந்துகளில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் சதமெடுத்து அசத்தினார். இது அவருடைய 2-வது டி20 சதமாகும். இதன்மூலம் அவர் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
மெக்கல்லம் 71 ஆட்டங்களில் 2140 ரன்களுடன் முதலிடத்திலும் இந்தியாவின் விராட் கோலி 55 ஆட்டங்களில் 1956 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் இருந்தார்கள். இந்நிலையில் இன்று சதமெடுத்த கப்தில், மெக்கல்லமின் ரன்களைத் தாண்டி 2185 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து மெக்கல்லம் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.
அதிரடியாக ஆடிய மன்ரோ 33 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து நியூஸி அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். இதனால் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்துள்ளது. நியூஸி. வீரர்கள் இன்று 18 சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...