உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கடைசி ஒருநாள்: தெ.ஆ. அணியில் 4 மாற்றங்கள்! இந்திய அணியில் முக்கிய வீரருக்கு ஓய்வு!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன...

News image
Updated On :16 பிப்ரவரி 2018, 10:44 am

எழில்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 6-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 

மொத்தம் 6 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 5 ஆட்டங்கள் முடிவில் 4-1 என முன்னிலை வகிக்கிறது இந்தியா. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 5-ஆவது ஆட்டத்தில் வென்றதன் மூலம், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது. அத்துடன், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

கடைசி ஆட்டத்திலும் வென்று, ஒருநாள் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. மறுபுறம், இந்தத் தொடரில் இதுவரை ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா. அந்த ஆறுதல் வெற்றியோடு கூடுதலாக ஒரு வெற்றி பெறும் நோக்கில் தென் ஆப்பிரிக்கா களம் காணும்.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் அணியில் இடம்பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் நான்கு மாற்றங்கள். மாரிஸ், ஸாண்டோ, தாஹிர், பெஹர்டீன் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஷம்ஸி, ரபாடா, டுமினி, மில்லர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.