அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

2018-ன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது!

23 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை...

News image
Updated On :1 ஜனவரி 2018, 9:37 am

எழில்

நியூஸிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூஸிலாந்து அணி 9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

2-வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் ஓவரில் 2 ரன்களுடன் கப்தில் அவுட் ஆனார். அந்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காத காலின் மன்ரோ அடுத்த ஓவரிலிருந்து தனது அதிரடியை வெளிப்படுத்தத் தொடங்கினார். 3-வது ஓவரில் 2 சிக்ஸர் அடித்த மன்ரோ, 5-வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அந்த ஓவரின் முடிவில் 18 பந்துகளில் அரை சதமெடுத்து அசத்தினார். இது ஒரு நியூஸிலாந்து வீரரின் இரண்டாவது அதிவேக அரை சதம்.  கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக 14 பந்துகளில் அரை சதம் எடுத்தார் மன்ரோ. 

வில்லியம்ஸ் வீசிய 6-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் விளாசிய மன்ரோ, அடுத்தப் பந்தில் ஆட்டமிழந்தார். 23 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பவர்பிளே முடிவில் 6 ஓவரில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. 

9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் 2-வது டி20 போட்டி கைவிடப்பட்டது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.