தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்தரப்பு ஒருநாள் போட்டியை வென்ற இந்திய ஏ அணி! வருங்காலம் குறித்து டிராவிட் மகிழ்ச்சி!

இந்தப் போட்டியில் மிகத் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம். பலர் இந்த நாட்டில் முதல்முறையாக விளையாடுகிறார்கள்... 

News image
Updated On :3 ஜூலை 2018, 6:47 am

எழில்

இந்தியா - இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளின் ஏ அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து ஏ அணியின் ஹையின் 108, லிவிங்ஸ்டோன் 83 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். இதனால் 34-வது ஓவரில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் நடுவரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் சொதப்பி இங்கிலாந்து ஏ அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தித் தந்தார்கள். இந்திய ஏ அணியில் சஹார், கலீல் அகமது தலா 3 விக்கெட்டுகளும் தாக்குர் 2 விக்கெட்டுகளும் எடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டையைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து ஏ அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. 

பேட்ஸ்மேன்கள் அனைவருமே பொறுப்புடன் விளையாடியதால் இலக்கை 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து முத்தரப்புப் போட்டியை வென்றது இந்திய ஏ அணி. மயங்க் அகர்வால் 40, ஸ்ரேயஸ் ஐயர் 44, விஹாரி 37 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தார்கள். ரிஷப் பண்ட் 64, க்ருணால் பாண்டியா 34 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்திய ஏ அணியின் வெற்றி குறித்து பயிற்சியாளர் டிராவிட் கூறியதாவது: இந்தப் போட்டியில் மிகத் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம். பலர் இந்த நாட்டில் முதல்முறையாக விளையாடுகிறார்கள். எனவே அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டோம். திறமையை வெளிப்படுத்தியுள்ள வீரர்கள் தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். உலகக் கோப்பைக்கு இன்னும் ஒருவருடம் உள்ள நிலையில் மாற்று வீரர்கள் நிறைய பேர் உருவாகியுள்ளார்கள்.  வீரர்களின் பங்களிப்பும் முன்னேற்றமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.