ரஞ்சி போட்டியில் அறிமுகமாகும் புதுச்சேரி அணி!
ரஞ்சி போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது. 153 ஆட்டங்கள் கொண்ட இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று பிப்ரவரி 6 அன்று...


புதுச்சேரி கிரிக்கெட் அணிக்கு அசோசியேட் உறுப்பினர் பதவியை அளித்துள்ளது பிசிசிஐ. இதை பிசிசிஐ நிர்வாகக் குழுவும் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து இந்த வருட ரஞ்சி போட்டியில் புதுச்சேரி அணி இடம்பெற்றுள்ளது.
2018-19 உள்ளூர் சீசனில் பிசிசிஐ சார்பில் 2017 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 13 முதல் இப்போட்டிகள் தொடங்குகின்றன. ஆரம்பமாக, மகளிர் டி20 சாலஞ்சர் கோப்பை ஆகஸ்ட் 13 முதல் தொடங்கவுள்ளன. ஆடவர் பங்குபெறும் துலீப் கோப்பை ஆகஸ்ட் 17 முதல் தொடங்கவுள்ளது.
ரஞ்சி போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது. 153 ஆட்டங்கள் கொண்ட இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று பிப்ரவரி 6 அன்று நடைபெறுகிறது. இந்த வருட ரஞ்சிப் போட்டியில் அருணாசல பிரதேசம், பிஹார், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், உத்தரகண்ட் ஆகிய 9 புதிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த வருடம் ரஞ்சி போட்டியில் புதுச்சேரி அறிமுகமாகவுள்ளது.
சிஏபி எனப்படும் புதுச்சேரி கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யவும் அதிகாரபூர்வ அமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வருட ரஞ்சிப் போட்டியில் 37 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...