ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்: இறுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் தோல்வி!

அமெரிக்காவில் நடைபெற்ற ஹால் ஆஃப் ஃபேம் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில்...

News image
Updated On :23 ஜூலை 2018, 12:55 pm IST

அமெரிக்காவில் நடைபெற்ற ஹால் ஆஃப் ஃபேம் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார். ஏடிபி உலக டூர் போட்டிகளில் ராம்குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது முதல் முறையாகும்.

ஏடிபி உலக டூர் ஒற்றையர் பிரிவில் கடந்த 7 ஆண்டுகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராம்குமார், இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனை சந்தித்தார். உலகின் 161-ஆம் நிலையில் இருக்கும் ராம்குமார், இந்தப் போட்டியில் இறுதிச்சுற்று வரையிலான ஆட்டத்தில் ஒரே ஒரு செட்டை மட்டுமே இழந்தார். இப்போட்டியில் அவர் பட்டம் வென்றிருந்தால் கடந்த 20 ஆண்டுகளில் ஏடிபி டூர் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். முன்னதாக, கடந்த 1998-ஆம் ஆண்டு லியாண்டர் பயஸ் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார். அதேபோல், கடைசியாக இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு சோம்தேவ் தேவ்வர்மன் முன்னேறியிருந்தார். அதில் அவர் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனிடம் வீழ்ந்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஜான்சன், 7-5, 3-6, 6-2 என்ற செட்களில் போட்டியை வென்று சாம்பியன் ஆனார். இது ஜான்சனின் நான்காவது ஏடிபி பட்டமாகும். இந்த ஆட்டம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடைபெற்றது. ராம்குமாரின் தோல்வி இந்திய டென்னிஸ் ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.