கோலி பொய் சொல்கிறார்: தன்னுடைய ரன்கள் முக்கியமில்லை என்று சொன்னதற்கு ஆண்டர்சன் விமரிசனம்!
நான் ரன் எடுக்கிறேனா இல்லையா என்பது விஷயமே இல்லை. அணி நன்றாக விளையாட வேண்டும்...


இந்தச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் குறித்து கோலி சொன்னார் - நான் ரன் எடுக்கிறேனா இல்லையா என்பது விஷயமே இல்லை. அணி நன்றாக விளையாட வேண்டும், அணியின் வெற்றியே முக்கியம் எனப் பேட்டியளித்தார்.
ஆனால் கோலியின் இந்தத் தன்னடக்கப் பேச்சை மறுக்கிறார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவர் கூறியதாவது:
கோலி ரன்கள் எடுப்பது முக்கியமான விஷயம் இல்லையா? அவர் இதைப் பற்றி பொய் கூறினார் என நினைக்கிறேன். இந்திய அணி டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு கோலியின் ரன்கள் முக்கியம். தன் அணிக்காக ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளார் கோலி. ஒரு கேப்டன் மற்றும் உலகின் சிறந்த வீரரிடமிருந்து இதைத்தானே எதிர்பார்க்கமுடியும். எனக்கு எதிராக மட்டுமல்ல, கோலியின் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிரான போட்டி மனப்பான்மை சிறப்பாக அமையும் என நினைக்கிறேன். வானிலை இந்தியர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. எனினும் டெஸ்ட் தொடருக்கு முன்பு மழை பெய்யும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியா -இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...