நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்று உலகக் கோப்பை பாட்மிண்டன் போட்டி துவக்கம்: சாதிப்பார்களா சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த்?

சீனாவில் திங்கள்கிழமை தொடங்கும் உலகக் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் சாதிப்பார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2018, 7:34 pm

சுஜித்குமார்

சீனாவில் திங்கள்கிழமை தொடங்கும் உலகக் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் சாதிப்பார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடக்கிறது.
 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற சாய்னா நெவால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் உலகக் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
 பி.வி.சிந்து கடந்த 2013 உலகக் கோப்பையில் வெண்கலமும், 2014-இல் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற பி.வி.சிந்து-ஜப்பானின் நவோமி ஓஹூரா ஆகியோர் இடையே 110 நிமிடங்கள் நடந்த ஆட்டம் உலகக் கோப்பை வரலாற்றிலேயே சிறந்த ஒன்றாக அறியப்பட்டது. இந்திய ஓபன், கொரியா ஓபன், சையத் மோடி சர்வதேச போட்டி, உள்ளிட்டவற்றில் பட்டம் வென்ற சிந்து, அதே நேரத்தில் உலகக் கோப்பை, துபை சூப்பர் சீரிஸ், ஹாங்காங் போட்டிகளில் தோல்வியடைந்தார். மேலும் காமன்வெல்த், இந்தியா ஓபன், தாய்லாந்து ஓபன் போட்டி இறுதிக்கு முன்னேறினாலும் பட்டம் வெல்ல முடியவில்லை. இறுதி ஆட்டங்களில் தோல்வி பெறுவதை தவிர்ப்பதில் சிந்து தீவிர கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. காலிறுதியில் நடப்பு சாம்பியன் நவோமியை எதிர்கொள்ளும் வாய்ப்பு சிந்துவுக்கு கிடைக்கும்.
 சாய்னா நெவால்: அதே நேரத்தில் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் 2015-இல் வெள்ளியும், 2017-இல் வெண்கலப் பதக்கமும் வென்றார். தற்போதுள்ள மந்தமான ஆட்டத்தை கைவிட்டு தீவிரமாக கவனம் செலுத்தி சாய்னா ஆட வேண்டியுள்ளது. முதல் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ஜாக்குவெட்டை அவர் எதிர்கொள்கிறார். அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னாள் சாம்பியன் தாய்லாந்து ரட்சனோக் இந்தானன், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் ஆகியோரையும் சாய்னா சந்திக்க வேண்டும்.
 ஆடவர்: மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் கே.ஸ்ரீகாந்த், கடந்த சீசனில் 4 பட்டங்களை வென்றிருந்தார். அயர்லாந்தின் நாட் நியுகெனை துவக்க சுற்றில் சந்திக்கும் அவர், மூன்றாம் சுற்றில் உலகின் 13-ஆம் நிலை வீரர் ஜொனதான் கிறிஸ்டியை சந்திக்க வாய்ப்புள்ளது. ஒலிம்பிக்கில் மூன்று முறை வெள்ளி வென்ற மலேசியாவின் லீ சொங் வெய் காயத்தால் விலகிய நிலையில் ஸ்ரீகாந்த் பதக்கம் வெல்ல கூடுதல் வாய்ப்புள்ளது.
 மற்றொரு முன்னணி வீரரான பிரணாய் துவக்க சுற்றில் ஆஸி.யின் அபினவ் மனோட்டாவை எதிர்கொள்கிறார். அடுத்த சுற்றுகளில் ஹாங்காங், சீன தைபே வீரர்களுடன் மோதும் அவர், காலிறுதியில் ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷி யுகியுடன் மோதலாம்.
 பார்மில் இல்லாத சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் ஒற்றையர் பிரிவில் களம் காண்கின்றனர்.
 இரட்டையர் பிரிவில் காமன்வெல்த் வெள்ளி இணை ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, மகளிர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை, ஆகியோர் இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இரட்டையர் பிரிவு தேசிய சாம்பியன் மனு அட்ரி-சுமீத் ரெட்டி, ரோஹன் கபூர்-குஹூ கார்க், செளரப் சர்மா-அனுஷ்கா பாரிக் கலப்பு இரட்டையர் பிரிவில் களம் காண்கின்றனர்.
 ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜுன்-ராமச்சந்திரன், தருண் கோனா-செளரவ் சர்மா, ஆகியோரும், மகளிர் பிரிவில் குஹூ கார்க்-நிங்ஷி ஹஸாரிகா, மேகனா-பூர்விஷா, சன்யோகிதா-பிரஜக்தா இணையும் பங்கேற்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.