/

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த டெஸ்ட் XI: வீரர்களின் பட்டியல் வெளியீடு!

இதுவரை நடைபெற்ற 999 டெஸ்ட் போட்டிகளிலிருந்து சிறந்த இங்கிலாந்து டெஸ்ட் XI பட்டியலை வெளியிட்டுள்ளது...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:23 pm

எழில்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்தியாவுடன் விளையாடும் முதல் டெஸ்ட் ஆட்டம், இங்கிலாந்து ஆடவர் அணி விளையாடும் 1000-வது டெஸ்ட் ஆட்டமாகும். இதன் மூலம் கிரிக்கெட் உலகிலேயே 1000-ஆவது டெஸ்டில் விளையாடும் முதல் நாடு என்ற பெருமையை அந்நாடு பெற்றுள்ளது. 

இந்நிலையில் இதுவரை நடைபெற்ற 999 டெஸ்ட் போட்டிகளிலிருந்து சிறந்த இங்கிலாந்து டெஸ்ட் XI பட்டியலை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம்.

இதற்கான தேர்வை 6000 பேர், 100 வீரர்களிலிருந்து சிறந்த 11 பேருக்கு வாக்களித்து முடிவு செய்துள்ளார்கள். தற்போதைய அணியில் உள்ள குக், ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளார்கள். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த XI:

அலாஸ்டர் குக், லென் ஹட்டன், டேவிட் கோவர், கெவின் பீட்டர்சன், ஜோ ரூட், இயன் போத்தம், ஆலன் நாட், கிராம் ஸ்வான், பிரெட் ட்ரூமேன், ஜேம்ஸ் ஆண்டர்சன், பாப் வில்லிஸ்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.