நார்வே செஸ்: வெற்றி பெறுவாரா விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே செஸ்: வெற்றி பெறுவாரா விஸ்வநாதன் ஆனந்த்

அல்டிபாக்ஸ் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.
Published on

அல்டிபாக்ஸ் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.
5 முறை உலக சாம்பியனான ஆனந்த் இதுவரை ஆடிய 6 சுற்று ஆட்டங்களும் டிராவிலேயே முடிவடைந்தன. இதன் மூலம் அவர் பின்தங்கி உள்ளார். அவருக்கு இன்னும் 3 சுற்று ஆட்டங்களே மீதமுள்ளன.
இந்நிலையில் 7-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸின் மேக்ஸிம் வாச்சியரையும், அதற்கு அடுத்த சுற்றுகளில் அமெரிக்காவின் பேபியனோ கரனாவையும், உக்ரைனின் செர்ஜி கர்ஜாக்கினையும் சந்திக்க உள்ளார்.
நார்வே செஸ் போட்டியில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத ஆனந்த், 7-வது சுற்று ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளார். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com