ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விராட் கோலிக்கு பாலி உம்ரிகர் விருது: பிசிசிஐ அறிவிப்பு!

பிசிசிஐ சார்பில் வழங்கப்படும் கடந்த இரு ஆண்டுகளுக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு...

News image
Updated On :7 ஜூன் 2018, 10:45 am

எழில்

பிசிசிஐ சார்பில் வழங்கப்படும் கடந்த இரு ஆண்டுகளுக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு, இந்திய அணி சார்பில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராகச் செயல்பட்ட விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சாதித்து வரும் இளம் மற்றும் மூத்த வீரர்களுக்கு, பிசிசிஐ ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. 

கடந்த இரு ஆண்டுகளிலும் (2016-17 & 2017-18) சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ஜூன் 12-ம் தேதி பெங்களூரில் விருது வழங்கும் விழா நடைபெறும்.

மகளிர் பிரிவில், சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகளாகச் செயல்பட்ட ஹர்மண்ப்ரீத் கெளர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

பாலி உம்ரிகர் விருது பெற்றவர்கள்

விராட் கோலி (5 முறை: 2011/12, 2014/15, 2015/16, 2016/17, 2017/18)
சச்சின் டெண்டுல்கர் (2 முறை: 2006/07, 2009/10)
சேவாக், 2007/08
கெளதம் கம்பீர், 2008/09
ராகுல் டிராவிட், 2010/11
அஸ்வின், 2012/13
புவனேஸ்வர் குமார், 2013/14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.