இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் பிரிவில் ஹர்மன்பிரீத் கெளர், ஸ்மிருதி மந்தானா ஆகியோர் விருது பெறுகின்றனர்.
இதுதொடர்பாக பிசிசிஐ சிஓஏ தலைவர் வினோத் ராய் கூறியதாவது:
கடந்த இரண்டு சீசன்களில் சிறந்த பேட்டிங்குக்காக கோலிக்கு ஆண்டின்சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது. (2016-17, 2017-18) சிறந்த சர்வதேச வீரர் விருது (பாலி உம்ரிகர்) விருது வரும் 12-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் தரப்படுகிறது.
2016-17-இல் 13 டெஸ்ட்டுகளில் 1332 ரன்களும், 27 ஒருநாள் போட்டிகளில் 1516 ரன்களும், 2017-18 சீசனில் 6 டெஸ்ட்களில் 896 ரன்களையும் கோலி குவித்தார். கோலிக்கு விருதுடன் மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
மகளிர் கிரிக்கெட்: அதே நேரத்தில் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி உலகக்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்றது. 2106-17-இல் ஹர்மன்பிரீத் கெளரும், 2017-18-இல் ஸ்மிருதி மந்தானாவும் சிறந்த வீராங்கனை விருது பெறுகின்றனர்.
பிசிசிஐ முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா பெயரில் 4 விருதுகள் வழங்கப்பட உள்ளன. 16 வயதுக்குட்பட்ட விஜய் மெர்ச்சண்ட் கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்தவர், விக்கெட் கீப்பருக்கும், மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த ஜூனியர், சீனியர் கிரிக்கெட் விருதுகளும் தரப்படுகின்றன.
சிறந்த மாநில சங்கமாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் (2016-17), தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கமும் (2017-18) தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் அபாரமாக விளையாடி பெருமை தேடித் தந்துள்ளன. அவர்களுக்கு அங்கீகாரம் தரும வகையில் சிறிய பாராட்டு என கிரிக்கெட் நிர்வாக குழு சிஓஏ தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு! விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை: விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



