ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாடியைக் காப்பீடு செய்துள்ளாரா விராட் கோலி?: சக வீரர்கள் ஆச்சர்யம்!

தன்னுடைய தாடியை விராட் கோலி காப்பீடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன...

News image
Updated On :9 ஜூன் 2018, 7:41 am

எழில்

தாடியின்றி சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை காண முடிவதில்லை. எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிக்கிறது. தாடியை எடுக்க மாட்டேன் என்றும் சமீபத்தில் பேட்டியளித்தார் கோலி.

இந்நிலையில் தன்னுடைய தாடியை விராட் கோலி காப்பீடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலியின் சக வீரர்களின் ட்வீட்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. 

இதுகுறித்த ட்வீட்டை வெளியிட்ட கேஎல் ராகுல், கூடவே சிசிடிவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில் இருவர் கோலியின் தாடியை அளவெடுப்பது போலவும், பிறகு ஓர் ஒப்பந்தத்தில் கோலி கையெழுத்திடுவதுபோலவும் அதில் காட்சிகள் இருந்தன. இதையடுத்து கோலி, தன் தாடியைக் காப்பீடு செய்துள்ளார் என்கிற செய்தி ஒன்று பரவிவருகிறது.

உங்கள் தாடியின் மீது அதிக விருப்பத்துடன் இருப்பது தெரியும். ஆனால் உங்கள் தாடியைக் காப்பீடு செய்தது குறித்த செய்திகள் என்னுடைய ஊகத்தை நிரூபிக்கின்றன என்று கூறியுள்ளார் கே.எல். ராகுல். அவர்தான் அதுபற்றிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர் சஹால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கோலி தன்னுடைய தாடியைக் காப்பீடு செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன். பிரபலங்கள் மற்றும் அவர்களின் தாடி இடையேயான தொடர்பு இதிலும் தொடர்கிறது. தாடியை நன்கு பராமரிப்பார். ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.  

தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மெழுகுச் சிலை வடிவமைப்புக்காக கோலியின் உருவ அடிப்படையில் 200 அளவைகளும், சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் - மெழுகுச் சிலையின் அளவுக்காக எடுக்கப்பட்டவையாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.