ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பிரெஞ்சு ஓபன்: சிமோனா ஹலெப் சாம்பியன்

உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப், யுஎஸ் ஓபன்சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதினர். 

News image
Updated On :9 ஜூன் 2018, 3:26 pm

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப், யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதினர்.

முதல் அரையிறுதியில் சிமோனோ ஹலேப், 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் முகுருஸாவும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் தனது முதல்நிலை அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க நாட்டு வீராங்கனைகள் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்-மடிசன் கீய்ஸ் ஆகியோர் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோன் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், 3-ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சிமோனா ஹலெப் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.