

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் 2-ஆவது போட்டி கார்டிஃப்-இல் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர் ஜேஸன் ராய் அபாரமாக அடி சதமடித்தார். மொத்தம் 108 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 91 ரன்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. ஷான் மார்ஷ் தனியாகப் போராடி 131 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் நட்சத்திர வீரர் லியம் பிளங்கட் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.