2003 உலகக் கோப்பை தொடரில் தோனி இடம்பெற்றிருக்க வேண்டும்: கங்குலி ஆதங்கம்
கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எனது தலைமையிலான இந்திய அணியில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்


கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எனது தலைமையிலான இந்திய அணியில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
'ஏ சென்சுரி இஸ் நாட் எனஃப்' என்ற பெயரில் கங்குலி சுயசரிதை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் கடந்துவந்த பாதையில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவுக்குப் பிறகு, உலகக் கோப்பையை வென்று கொடுத்ததுடன், விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் மற்றொரு முன்னாள் கேப்டன் தோனி குறித்து கங்குலி எழுதியுள்ளார்.
அந்தப் புத்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல் பின்வருமாறு:
ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை படைக்கும் வீரர்களையும், ஆட்டத்தின்போது எழக்கூடிய எந்தவித கடினமான சூழலை எதிர்கொள்ளும் திறனும் கொண்ட வீரர்களையும் நான் தேடிக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட சூழலில் 2004-ஆம் ஆண்டில் தோனியை நான் கண்டேன். நான் நினைத்தது போன்ற திறமைகளை அவரிடம் கண்டேன்.
முதல் ஆட்டத்திலேயே அவரது திறமையை இனம் கண்டு கொண்டேன். 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எனது தலைமையிலான இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். அப்போது, தோனி இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.அவரை சிறந்த வீரர் என்று நான் மதிப்பிட்டது வீண்போகவில்லை. தற்போது அவர் பெற்றிருக்கும் இடத்தைக் கண்டு வியக்கிறேன் என்று அந்தப் புத்தகத்தில் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கங்குலி விடைபெற்றார். கடைசி ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில், அந்த அணிக்கு கேப்டனாக இருந்த தோனி, கங்குலிக்கு மரியாதை செய்யும் வகையில், அவரது கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்தச் சொன்னார்.
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் தோனி தலைமையிலான இந்திய அணியும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...