தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இலங்கை நிலவரம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருத்தம்!

இலங்கையில் நடப்பது மிகவும் வேதனையானது. அருமையான மக்களைக் கொண்ட அருமையான நாடு அது... 

News image
Updated On :7 மார்ச் 2018, 11:52 am

இலங்கையில் 10 நாள்களுக்கு அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. கண்டியில் சிங்கள புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கை நிலவரம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் கூறியதாவது:

இலங்கையில் நடப்பது மிகவும் வேதனையானது. அருமையான மக்களைக் கொண்ட அருமையான நாடு அது. வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட மக்களிடையேயான மோதல் விரைவில் முடிவுபெறும். வாழு, வாழ விடு. வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது முக்கியம். அங்கு இயல்பு நிலை திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.