இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தமிழ்ப் பெண்!

சிட்னியில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் தமிழ்ப் பெண் இளவேனில்...

News image
Updated On :22 மார்ச் 2018, 5:52 am

எழில்

சிட்னியில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் தமிழ்ப் பெண் இளவேனில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

குஜராத்தில் வசிக்கும் 18 வயது தமிழ்ப் பெண்ணான இளவேனில், 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 249.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தகுதிச்சுற்றின் முடிவில் 631.4 புள்ளிகள் பெற்று ஜூனியர் உலக சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச அளவில் அவர் பங்குபெறும் இரண்டாவது போட்டி இது. கடந்த வருடம் ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் 28-வதாக வந்த இளவேனில், இந்தமுறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் பங்கேற்ற இதர இரு இந்திய வீராங்கனைகள் ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளார்.

மேலும் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இந்தியாவின் இளவேனில், ஸ்ரேயா, ஜீனா ஆகிய மூவரும் இணைந்து தங்கம் வென்றுள்ளார்கள். 

இளவேனிலின் இச்சாதனைக்கு பிரபல துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.