ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கணவர் ஷமியை இன்னமும் காதலிக்கிறேன்: ஹசின் ஜஹான் உருக்கம்!

அவர் என்னை மனைவியாக எண்ணாமல் இருக்கலாம். ஆனால் நான் அவரை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் காதலிக்கிறேன்...

News image
Updated On :27 மார்ச் 2018, 7:47 am

எழில்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி டேராடூனில் இருந்து காரில் தில்லி வரும்போது விபத்தில் சிக்கி லேசான காயம் அடைந்தார். டேராடூனில் உள்ள கிரிக்கெட் அகாதெமி ஒன்றில் புத்துணர்ச்சி மற்றும் பயிற்சிக்காக சென்றிருந்த ஷமி, தில்லியை நோக்கி தனது காரில் சனிக்கிழமை வந்துகொண்டிருந்தார். அப்போது டிரக் ஒன்றுடன் அவரது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த ஷமிக்கு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஷமி பயிற்சி பெற்ற கிரிக்கெட் அகாதெமியின் உரிமையாளர் அபிமன்யு ஈஸ்வரன் கூறியதாவது: ஷமி நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனிப்பட்ட இடத்தில் அவர் ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்கள் ஒருநாள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தினர். உடல்நலம் ஒத்துழைக்கும் பட்சத்தில் அவர் திங்கள்கிழமை தில்லி வருவார். இந்தக் காயத்தால் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில் பாதிப்பு ஏதும் இல்லை என்று அபிமன்யு கூறினார். இந்த சீசனில் ஷமி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான், காவல்துறையில் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக கொல்கத்தா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் கூறியதாவது:

அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அவர் எனக்குச் செய்த காரியங்களுக்காகத்தான் அவரை எதிர்த்துப் போராடுகிறேன். அதற்காக அவர் காயங்களால் அவதிப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. அவர் என்னை மனைவியாக எண்ணாமல் இருக்கலாம். ஆனால் நான் அவரை இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் காதலிக்கிறேன். ஏனெனில் அவர் என் கணவர். 

என் மகளுடன் சென்று அவரைச் சந்திக்க எண்ணினேன். அவரைத் தொடர்புகொள்ள பல வழிகளில் முயற்சி செய்தேன். ஆனால் அவர் என் அழைப்புகளை ஏற்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என்பதையே என்னிடம் தெரிவிக்க அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மறுக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.