2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27-ந் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 7-ந் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஒருவார காலமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 வருட தடைக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கியுள்ளதால், பயிற்சியை பார்க்கவே சேப்பாக்கம் மைதானத்தில் பெரும் கூட்டம் கூடுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சமூக வலைதளங்களில் தங்களின் பயிற்சி விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறது. இதுவும் சிஎஸ்கே ரசிகர்களால் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், காலா டீசரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெற்றுள்ளது போன்ற விடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. அதில், மகேந்திர சிங் தோனி, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விடியோவில், டீசரில் புகழ்பெற்ற வசனமான 'கியாரே செட்டிங்கா' எனும் வசனம் 'தல' தோனி பேசுவது போன்று இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


