பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

88 ரன்களுக்குச் சுருண்டது பஞ்சாப்: அபார வெற்றி கண்ட ஆர்சிபி!

பெங்களுருவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 88 ரன்களுடன் சுருண்டது பஞ்சாப் அணி.

News image
Updated On :15 மே 2018, 7:04 am

பெங்களுருவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 88 ரன்களுடன் சுருண்டது பஞ்சாப் அணி. இதையடுத்து பெங்களூர் அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் 48-வது ஆட்டம் திங்கள்கிழமை இரவு இந்தூரில் நடைபெற்றது.

இதில் வென்றால் தான் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது குறித்து எண்ண முடியும் என்ற நிலையில் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் தரப்பில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ஆனால் தொடக்கமே பஞ்சாப்புக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. லோகேஷ் ராகுல் 21, கெயில் 18, கருண் நாயர் 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். உமேஷ் சிறப்பாக பந்துவீசி, ராகுல், கெயிலை வெளியேற்றினார். சிராஜ் பந்தில் கருண் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்டாய்னிஸ் 2 ரன்களுக்கு சஹால் பந்தில் போல்டானார். கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் மயங்க் அகர்வால் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது பஞ்சாப் அணி 9 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து வெறும் 61 ரன்களையே எடுத்திருந்தது. ஒரளவு நிலைத்து ஆடி வந்த ஆரோன் பின்ச் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்களுக்கு மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமல் பார்த்திவ் பட்டேலால் ரன் அவுட்டானார். ஆண்ட்ரு டையும் உமேஷ் பந்துவீச்சில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் ஆட வந்த மொகித் சர்மா 3 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 15-வது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களையே பஞ்சாப் எடுத்து திணறிக் கொண்டிருந்தது. அங்கித் ராஜ்புத் 1 ரன்னுக்கு செளதி-மொயினால் ரன் அவுட் செய்யப்பட்டதுடன் பஞ்சாப் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இறுதியில் 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களையே பஞ்சாப் அணியால் எடுக்க முடிந்தது. பெங்களூரு தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், சஹால், கிராண்ட்ஹோம், மொயின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பஞ்சாப் அணியின் 88 ரன்கள் இந்த ஐபிஎல் சீசனில் இரண்டாவது குறைவான ஸ்கோராகும்.

இந்த எளிதான இலக்கை 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அடைந்தது பெங்களூர் அணி. விராட் கோலி 48 ரன்களும் பார்தீவ் படேல் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.