ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சவ்வு விலகல் பிரச்னை காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் கோலி விளையாடுவது சந்தேகம்!

கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி இங்கிலாந்து தொடருக்குச் சிறப்பாகத் தயாராகவேண்டும் என்கிற கோலியின் திட்டத்தில் அடி விழுந்துள்ளது...

News image
Updated On :24 மே 2018, 5:27 am

எழில்

டெஸ்ட் விளையாடக் கூடிய அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக அடுத்த மாதம் விளையாடுகிறது. இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியான சர்ரேவில் ஜூன் மாதம் முழுவதும் விளையாட இந்திய கேப்டன் விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்திய அணி அடுத்தச் சில மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. இங்கிலாந்தில் நிலவும் ஆட்ட சூழல்நிலை குறித்து அறிவதற்காக கோலி, சர்ரே அணியில் விளையாடுகிறார். 

இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி இங்கிலாந்து தொடருக்குச் சிறப்பாகத் தயாராகவேண்டும் என்கிற கோலியின் திட்டத்தில் அடி விழுந்துள்ளது. கோலிக்குத் தண்டுவட நரம்பில் (spinal nerve) காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தார். கோலிக்கு ஏற்பட்டுள்ள சவ்வு விலகல் (Herniated disk) பிரச்னை காரணமாக அவர் ஓய்வெடுக்க வேண்டும், அதற்குப் பதிலாக கவுண்டி கிரிக்கெட் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றால் காயம் மேலும் தீவிரமாகி, இங்கிலாந்து தொடரிலிருந்து விலக நேரிடும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும் இதனால் கோலி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்கள். இதனால் கவுண்டி கிரிக்கெட்டில் கோலி விளையாடுவது தற்போதைக்குச் சந்தேகமாகியுள்ளது. இத்தகவல் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.   

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கோலி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.