மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பதவி விலகினார் மார்க் டெய்லர்

பந்தை சேதப்படுத்திய விவகாரம் எதிரொலியாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா இயக்குநர் பதவியில் இருந்து விலகினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் டெய்லர்.

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:57 am IST


பந்தை சேதப்படுத்திய விவகாரம் எதிரொலியாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா இயக்குநர் பதவியில் இருந்து விலகினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் டெய்லர்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸி. வீரர்கள் பந்தை சேதப்படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்ற முயன்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த சிஏ கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது.
இப்பிரச்னையால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. அணி பலமிழந்துள்ள நிலையில் வீரர்கள் மீதான நீண்ட கால தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிஏ தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட், தலைவர் டேவிட் பீவர் ஆகியோரும் ராஜிநாமா செய்து விட்டனர்.
இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பில் இருந்து மார்க் டெய்லரும் விலகி விட்டார். சேனல் 9 தொலைக்காட்சியுடன் உலகக் கோப்பை 2019 தொடர்பாக டெய்லர் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஆதாயம் தரும் பதவி பிரச்னை எழுந்துள்ளதால் அவர் பதவி விலகி விட்டார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரம் மற்றும் சிஏ அமைப்பு முற்றிலும் புதிய எழுச்சியுடன் மீளும் வகையில் தான் இந்த முடிவை எடுத்ததாக டெய்லர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.