தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டம்: தமிழ்நாடு 122/3

தமிழக அணி 2-ம் நாள் முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2018, 12:17 pm

ஆந்திரம்-தமிழகம் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் ஆந்திராவின் ஓங்கோலில் நேற்று தொடங்கியது. நேற்று ஆந்திரம் 198/8 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4, சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆந்திர அணி, 84.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிரிநாத் ரெட்டி 86 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது 4, நடராஜன் 3, சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 2-ம் நாள் முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. அபரஜித் 27, ஜெகதீசன் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தமிழக அணி, 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 94 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.