200 டெஸ்ட் விக்கெட்டுகள், 3000 டெஸ்ட் ரன்கள்.
இந்த இரண்டையும் குறைவான டெஸ்டுகளில் எடுத்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன்.
மேலும் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ள முதல் வங்கதேச வீரர் என்கிற பெருமையையும் அவர் எட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுவதுமாகத் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி (0-2), அடுத்ததாக வங்கதேச அணியிடமும் முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி, 324 ரன்களும் மே.இ. அணி 246 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் முன்னிலை பெற்றபோது வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 125 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் மே.இ. அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மோசமான பேட்டிங்கினால் தனது 2-வது இன்னிங்ஸில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மே.இ. அணி. இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்டில் பங்கேற்ற ஷகிப் அல் ஹசன், தனது 54-வது டெஸ்டில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள், 3000 டெஸ்ட் ரன்கள் என்கிற இலக்கை குறைவான டெஸ்டுகளில் எட்டி சாதனை செய்துள்ளார். இந்த டெஸ்டுக்கு முன்பு 196 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஷகிப், 2-வது இன்னிங்ஸில் கிரான் பவலின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் 200-வது விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். முதல் இன்னிங்ஸில் அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 200 டெஸ்ட் விக்கெட்டுகள், 3000 டெஸ்ட் ரன்கள் என்கிற சாதனையை 55 டெஸ்டுகளில் நிகழ்த்தினார் இங்கிலாந்தின் இயன் போத்தம். ஒரு டெஸ்டுக்கு முன்னதாக அந்த இலக்கை அடைந்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஷகிப் அல் ஹசன்.
குறைவான டெஸ்டுகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள், 3000 டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்கள்:
ஷகிப் அல் ஹசன் - 54 டெஸ்டுகள்
போத்தம் - 55 டெஸ்டுகள்
கேர்ன்ஸ் - 58 டெஸ்டுகள்
ஃபிளிண்டாஃப் - 69 டெஸ்டுகள்
கபில் தேவ் - 73 டெஸ்டுகள்
இந்தச் செய்தியைப் படிக்கும்போது, ஆர். அஸ்வின் ஏன் இந்தப் பட்டியலில் இல்லை என உங்களுக்குக் கேள்வி எழலாம். இதுவரை 64 டெஸ்டுகள் விளையாடியுள்ள அஸ்வின் 336 விக்கெட்டுகளும் 2331 ரன்களும் எடுத்ததால் இப்படியலில் இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்

ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


