விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

ஐந்து பேர் அரை சதங்கள்: நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்த திருப்தியில் இந்திய அணி!

ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2018, 10:25 am

ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளிடையேயான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை இரவு முதலே தொடங்கிய மழை, புதன்கிழமை காலையும் தொடர்ந்து நீடித்தது. இதனால் மைதானம் முழுவதுமாக ஈரப்பதம் அடைந்தது.

2-ம் நாளான இன்று இந்திய அணிக்கு நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்தது. பிருத்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி ஆகியோர்  அரை சதமெடுத்தார்கள். ரோஹித் சர்மா 40 ரன்கள் எடுத்தார். முன்னணி பேட்ஸ்மேன்களில் ராகுல் மட்டும் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார்.

இந்திய அணி 92 ஓவர்களில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய லெவன் அணியின் ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய லெவன் அணி, 4 ஓவர்கள் விளையாடி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.