விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

ரஞ்சி: பெங்கால் அணியை 189 ரன்களுக்குள் சுருட்டிய தமிழக அணி!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்காலுக்கு எதிராகத் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :29 நவம்பர் 2018, 12:19 pm

எழில்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்காலுக்கு எதிராகத் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு பெங்கால் அணியை 189 ரன்களுக்குள் சுருட்டியது.

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 218 ரன்கள் எடுத்தது. அபராஜித் 81, முகமது 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அபராஜித் பிரமாதமாக விளையாடி 103 ரன்கள் எடுத்தார். பெங்கால் தரப்பில் இஷான் பொரேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பெங்கால் அணி 63.5 ஓவர்களில் 189 ரன்களுக்குச் சுருண்டது. தொடக்க வீரர் அபிஷேக் குமார் ராமன் 98 ரன்கள் எடுத்தார். தமிழகம் சார்பில் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளும் முகமது 4 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழக அணி 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்துள்ளது. முகுந்த 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தமிழக அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.