ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

புரோ கபடி லீக்: புணேரி பல்தான் அணி அபார வெற்றி

புரோ கபடி லீக் சீசன் 6-ஆவது போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் புணேரி பல்தான்

News image
Updated On :9 அக்டோபர் 2018, 1:02 am IST


புரோ கபடி லீக் சீசன் 6-ஆவது போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் புணேரி பல்தான் 34-22 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
இரு அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. பிகேஎல் போட்டிகளின் முதல் கட்ட ஆட்டங்கள் சென்னையில் வரும் 11-ஆம் தேதி வரை நடக்கின்றன. இதில் 12 அணிகள் களத்தில் உள்ளன. திங்கள்கிழமை இரவு முதல் ஆட்டத்தில் புணேரி பல்தான் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஞாயிற்றுக்கிழமை இரவு யு மும்பா அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 32-32 என டிரா செய்தது புணே. 
அந்த உற்சாகத்தில் அதன் நட்சத்திர வீரர்கள் சந்தீப் நர்வால், நிதின் தோமர் ஆகியோர் ஹரியாணா தரப்பில் அடிக்கடி ஊடுருவி சிக்கலை உண்டாக்கினர்.
ஹரியாணா அணியில் மோனு கோயட், சுரேந்தர் நடா ஆகியோர் தங்கள் அணியின் வெற்றிக்காக பாடுபட்டனர். ஆட்டம் தொடங்கவுடனே புணே அணி 5-4 என முன்னிலை பெற்றது. நிதின் தோமரை ஹரியாணா வீரர்கள் மடக்கியதால் அவரால் புள்ளிகளை குவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
முதல் பாதி ஆட்ட நிறைவில் 15-9 என்ற புள்ளிக்கணக்கில் புணே முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கியதும் புணே வீரர் தோமர் காயமுற்றார். எனினும் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் புணே அணி முன்னிலையை தொடர்ந்து தக்க வைத்த நிலையில் இரண்டாவது முறையாக ஹரியாணா ஆல் அவுட்டானது. 
இறுதியில் 34-22 என்ற புள்ளிக்கணக்கில் புணே அணி அபார வெற்றி பெற்றது. நிதின் தோமர் 7 புள்ளிகளை குவித்தார். ஹரியாணா கேப்டன் சுரேந்தர் நடா காயமுற்று வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. சிறந்த ரைடராகவும், ஆட்ட நாயகனாகவும் நிதின் தோமர் (புணே), டிபன்டராக ரவிக்குமார் (புணே), தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாவது ஆட்டத்தில் தமிழ்த் தலைவாஸ்-யுபி யோத்தாஸ் அணிகள் மோதின.

இன்றைய ஆட்டங்கள்
தபாங் தில்லி-குஜராத் 
இரவு 8.00.
தமிழ்த் தலைவாஸ்-தெலுகு டைட்டன்ஸ் 
இரவு 9.00.

நேரு உள்விளையாட்டரங்கம்.சென்னை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.