தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

உனது தீவிர நிலைத்தன்மை பிரமிப்பை ஏற்படுத்துகிறது: கோலிக்கு சச்சின் பாராட்டு

கிரிக்கெட் மீதான உனது தீவிர நிலைத்தன்மை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் விராட் கோலியை பாராட்டியுள்ளார். 

News image
Updated On :24 அக்டோபர் 2018, 2:39 pm

கிரிக்கெட் மீதான உனது தீவிர நிலைத்தன்மை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் விராட் கோலியை பாராட்டியுள்ளார். 

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் எனும் புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

மொத்தம் 129 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 157 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதன்மூலம் நடப்பாண்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் ஆனார். இதையடுத்து பல்வேறு சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், கிரிக்கெட் மீதான உனது தீவிர நிலைத்தன்மை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 10 ஆயிரம் ரன்களைக் கடந்ததற்கு வாழ்த்துகள். இந்த ரன் வெள்ளத்தை மேலும் தொடருக என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கேப்டன் விராட் கோலியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.