ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

டேவிஸ் கோப்பை: ஜோகோவிச் இல்லாத செர்பிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் இல்லாத செர்பிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர்.

Published On :


டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் இல்லாத செர்பிய அணியை எதிர்கொள்கிறது இந்தியா.
டேவிஸ் கோப்பை உலக தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி வெள்ளிக்கிழமை செர்பியாவின் கிரால்ஜெவோவில் தொடங்கும் ஆட்டத்தில் விளையாடுகிறது.
யுஎஸ் ஓபன் சாம்பியன் ஜோகோவிச் டேவிஸ் கோப்பை போட்டிக்கான செர்பிய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணி ஆட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
முதல் ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன்-லாஸ்லோ ஜெரேவை எதிர்கொள்கிறார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் பிரஜேனேஷ் குணேஸ்வரன் செர்பியாவின் முதல்நிலை வீரர் துஸான் லஜோவிக்குடன் மோதுகிறார். சனிக்கிழமை நடைபெறும் இரட்டையர் போட்டியில் ரோஹன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி இணை-நிக்கோலோ-டேனிலோ இணையுடன் மோதுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார் லஜோவிக்கையும், பிரஜ்னேஷ் ஜெரேவையும் எதிர்கொள்கின்றனர்.
முன்னணி வீரர் யுகி பாம்ப்ரி மூட்டுகாயம் காரணமாக பங்கேற்கவில்லை. 
ஐரோப்பாவில் பல்வேறு களிமண் தரை மைதானங்களில் ஆடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு பெரிதும் உதவும் என கேப்டன் ஜீஷன் அலி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.