திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து ஆரம்பக்கட்ட அணி அறிவிப்பு! ஆர்ச்சருக்கு இடமில்லை!

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள 17 வீரர்களில் யார் வேண்டுமானாலும் இறுதிக்கட்ட அணியில் இடம்பெறலாம்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:41 am

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து ஆரம்பக்கட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. எனினும் மே 8 முதல் 19 வரை நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆர்ச்சரும் கிறிஸ் ஜார்டனும் இடம்பெற்றுள்ளார்கள். பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

விதிமுறைகளின்படி ஏப்ரல் 23-க்குள் ஆரம்பக்கட்ட அணியை அறிவித்தாகவேண்டும். எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள 17 வீரர்களில் யார் வேண்டுமானாலும் இறுதிக்கட்ட அணியில் இடம்பெறலாம் என்று தேர்வுக்குழுத் தலைவர் எட் ஸ்மித் கூறியுள்ளார். 

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணிக்கான இறுதித் தேர்வு மே 23-க்குள் அறிவிக்கப்படவேண்டும். ஏப்ரல் 23-க்கு முன்பு, அணிகள் வீரர்களின் பட்டியலின் வெளியிடவேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஏழு நாள்களுக்கு முன்புவரை அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்குப் பிறகு ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் உலகக் கோப்பைத் தொழில்நுட்பக் குழுவின் அனுமதி பெறவேண்டும். 

உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்து ஆரம்பக்கட்ட அணி: இயன் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜாஸ் பட்லர், டாம் கரண், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.