இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முழு அட்டவணை, முழு விவரங்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க ஆட்டத்தில் ஆஷஸ் தொடரில் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன...


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது. 27 தொடர்களில் மொத்தம் 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இ. தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட 9 அணிகள் ஆடுகின்றன. இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் வரும் 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும்.
ஒவ்வொரு அணியும் 3 உள்ளூர் மற்றும் 3 வெளியூர் ஆட்டங்களில் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு தொடரும் 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டு, ஆட்டங்கள் எண்ணிக்கையில் பகிரப்படும். 2 ஆட்டங்கள் தொடர் என்றால் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 60 புள்ளிகள் தரப்படும், 3 ஆட்டங்கள் தொடருக்கு தலா 40 புள்ளிகள் தரப்படும். டை ஆனால் 50 சதவீத புள்ளிகள் தரப்படும். டிரா ஆகும் ஆட்டத்துக்கு 3-1 விகிதப்படி புள்ளிகள் தரப்படும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க ஆட்டத்தில் ஆஷஸ் தொடரில் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வரும் ஆக. 22-ஆம் தேதி தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் மே.இ.தீவுகளுடன் மோதுகிறது. 2 முதல் 5 ஆட்டங்கள் வரை ஒவ்வொரு தொடரில் இடம் பெறும். பகலிரவு டெஸ்ட்களும் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்தியா: 18 டெஸ்டுகள்
ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs மே.இ. அணிகள் (வெளிநாடு)
அக்டோபர் - நவம்பர் 2019: 3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (உள்ளூர்)
நவம்பர் 2019: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (உள்ளூர்)
பிப்ரவரி 2020: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (வெளிநாடு)
டிசம்பர் 2020: 4 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (வெளிநாடு)
ஜனவரி - பிப்ரவரி 2021: 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (உள்ளூர்)
இங்கிலாந்து: 22 டெஸ்டுகள்
ஆகஸ்ட் 2019: 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (உள்ளூர்)
டிசம்பர் 2019 - ஜனவரி 2020: 4 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (வெளிநாடு)
மார்ச் 2020: 2 டெஸ்டுகள் vs இலங்கை (வெளிநாடு)
ஜூன் – ஜூலை 2020: 3 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (உள்ளூர்)
ஜூலை - ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (உள்ளூர்)
ஜனவரி - பிப்ரவரி 2021: 5 டெஸ்டுகள் vs இந்தியா (வெளிநாடு)
ஆஸ்திரேலியா: 18 டெஸ்டுகள்
ஜூலை - ஆகஸ்ட்-செப்டம்பர் 2019: 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (வெளிநாடு)
நவம்பர் 2019: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (உள்ளூர்)
டிசம்பர் 2019-ஜனவரி 2020: 3 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (உள்ளூர்)
பிப்ரவரி2020: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (வெளிநாடு)
நவம்பர்-டிசம்பர் 2020: 4 டெஸ்டுகள் vs இந்தியா (உள்ளூர்)
பிப்ரவரி-மார்ச் 2021: 3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (வெளிநாடு)
தென் ஆப்பிரிக்கா: 15 டெஸ்டுகள்
அக்டோபர் 2019: 3 டெஸ்டுகள் vs இந்தியா (வெளிநாடு)
டிசம்பர் 2019-ஜனவரி 2020: 4 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (உள்ளூர்)
ஜூலை - ஆகஸ்ட் 2020: 2 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (வெளிநாடு)
ஜனவரி 2021: 2 டெஸ்டுகள் vs இலங்கை (உள்ளூர்)
ஜனவரி - பிப்ரவரி 2021: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (வெளிநாடு)
பிப்ரவரி-மார்ச் 2021: 3 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (உள்ளூர்)
நியூஸிலாந்து: 14 டெஸ்டுகள்
ஜூலை - ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs இலங்கை (வெளிநாடு)
டிசம்பர் 2019-ஜனவரி 2020: 3 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (வெளிநாடு)
பிப்ரவரி2020: 2 டெஸ்டுகள் vs இந்தியா (உள்ளூர்)
ஆகஸ்ட்-செப்டம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (வெளிநாடு)
நவம்பர்-டிசம்பர் 2020: 3 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (உள்ளூர்)
டிசம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (உள்ளூர்)
இலங்கை: 13 டெஸ்டுகள்
ஜூலை - ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (உள்ளூர்)
அக்டோபர் 2019: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (வெளிநாடு)
மார்ச்-ஏப்ரல் 2020: 2 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (உள்ளூர்)
ஜூலை - ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs வங்கதேசம் (உள்ளூர்)
ஜனவரி 2021: 2 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (வெளிநாடு)
பிப்ரவரி-மார்ச் 2021: 2 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (வெளிநாடு)
பாகிஸ்தான்: 13 டெஸ்டுகள்
அக்டோபர் 2019: 2 டெஸ்டுகள் vs இலங்கை (உள்ளூர்)
நவம்பர்-டிசம்பர் 2019: 2 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (வெளிநாடு)
ஜனவரி - பிப்ரவரி 2020: 2 டெஸ்டுகள் vs வங்கதேசம் (உள்ளூர்)
ஜூலை - ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (வெளிநாடு)
டிசம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (வெளிநாடு)
ஜனவரி - பிப்ரவரி 2021: 2 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (உள்ளூர்)
வங்கதேசம்: 14 டெஸ்டுகள்
நவம்பர் 2019: 3 டெஸ்டுகள் vs இந்தியா (வெளிநாடு)
ஜனவரி - பிப்ரவரி 2020: 2 டெஸ்டுகள் vs பாகிஸ்தான் (வெளிநாடு)
பிப்ரவரி2020: 2 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா (உள்ளூர்)
ஜூலை - ஆகஸ்ட் 2020: 3 டெஸ்டுகள் vs இலங்கை (வெளிநாடு)
ஆகஸ்ட்-செப்டம்பர் 2020: 2 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (உள்ளூர்)
ஜனவரி - பிப்ரவரி 2021: 3 டெஸ்டுகள் vs மே.இ. தீவுகள் (உள்ளூர்)
மே.இ. தீவுகள்: 15 டெஸ்டுகள்
ஜூலை - ஆகஸ்ட் 2019: 2 டெஸ்டுகள் vs இந்தியா (உள்ளூர்)
ஜூன் – ஜூலை 2020: 3 டெஸ்டுகள் vs இங்கிலாந்து (வெளிநாடு)
ஜூலை - ஆகஸ்ட் 2020: 2 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா (உள்ளூர்)
நவம்பர்-டிசம்பர் 2020: 3 டெஸ்டுகள் vs நியூஸிலாந்து (வெளிநாடு)
ஜனவரி - பிப்ரவரி 2021: 3 டெஸ்டுகள் vs வங்கதேசம் (வெளிநாடு)
பிப்ரவரி-மார்ச் 2021: 2 டெஸ்டுகள் vs இலங்கை (உள்ளூர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...