எல்லாம் சரியாகும் மகனே! அஃப்ரிடி ட்வீட்டை விளாசிய கம்பீர்

ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் விரைவில் சரியாகும் மகனே என பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி ட்விட்டர் பதிவுக்கு முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தக்க பதிலடி அளித்தார்.
எல்லாம் சரியாகும் மகனே! அஃப்ரிடி ட்வீட்டை விளாசிய கம்பீர்

ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் விரைவில் சரியாகும் மகனே என பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி ட்விட்டர் பதிவுக்கு முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தக்க பதிலடி அளித்தார்.

முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி இதனை விமர்சிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டார். அதில், ''ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திரம் என்பதை நம் அனைவரைப் போன்று காஷ்மீர் மக்களின் அதிகாரம் அவர்களிடமே அளிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஐநா இன்னும் ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

காஷ்மீர் மக்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்கள் கவனிக்கப்பட வேண்டியது. விரைவில் ஐநாவும், அமெரிக்காவும் இணைந்து இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு தக்க பதிலடி அளிக்கும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், கிழக்கு தில்லி பாஜக மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ''ஷாஹித் அஃப்ரிடி சரியாகத் தான் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் மக்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியதுதான். இப்பிரச்னையை முன்னெடுத்த அஃப்ரிடி பாராட்டுக்குரியவர். ஆனால் இந்த குற்றச்செயல்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் மறந்துவிட்டார்.

ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் விரைவில் சரியாகும் மகனே'' என்று விளாசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com