2-வது ஆஷஸ் டெஸ்ட்: 12 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து அணி!
2-வது டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து அணி...


ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை 251 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட், லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 14 முதல் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டில் விளையாடிய மொயீன் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. லார்ட்ஸ் டெஸ்ட் மூலமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ளார். ஆண்டர்சனுக்குப் பதிலாக சாம் கரண் அணியில் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது.
லார்ட்ஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:
ஜோ ரூட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லி, ஜேக் லீச், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...