சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? 

உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் 'டாப் 10'  கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 
சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? 

புது தில்லி: உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் 'டாப் 10'  கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2008-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீரரான விராட் கோலி தற்போது வரை 20,000 சர்வதேச ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் செலுத்துபவராக இருக்கிறார். பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய மூன்றிலும் அவரை தலா மூன்று கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

அடுத்த இடத்தில முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவரை  பேஸ்புக்கில் 2.8 கோடி பேரும், ட்விட்டரில் மூன்று கோடியே பத்து லட்சம் பேரும், இன்ஸ்டாக்ராமில் ஒரு கோடியே 65 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

மூக வலைத்தளங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாவிட்டாலும்  முன்றாவது இடத்தில்  இந்திய ஒரு நாள் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பிடித்துள்ளார்.   அவரை பேஸ்புக்கில் 2 கோடியே ஐந்து லட்சம் பேரும், ட்விட்டரில் 77 லட்சம் பேரும், இன்ஸ்டாக்ராமில் ஒரு கோடியே 54 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

இதற்கு அடுத்த இடங்களில் ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். எட்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீர ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். ஒன்பதாவது இடத்தில மீண்டும் இந்தியாவைச் சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் தவானும், பத்தாவது இடத்தில மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் க்றிஸ் கெயிலும் இடம் பிடித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com