இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங்குக்குக் காரணம் என்ன?: கே.எல். ராகுல் விளக்கம்

மைதானத்தின் அளவு பிரச்னையாக இல்லை. இங்கு விளக்குகள் கீழ்நிலையில் உள்ளன. இதன் வெளிச்சத்தில் பந்தைச் சரிவர பார்க்க முடிவதில்லை.
இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங்குக்குக் காரணம் என்ன?: கே.எல். ராகுல் விளக்கம்
Updated on
1 min read

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 207/5 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி  4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்து வென்றது. 6 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 94 ரன்களை விளாசிய கேப்டன் கோலி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. வாஷிங்டன் சுந்தரும் ரோஹித் சர்மாவும் சில கேட்சுகளைத் தவறவிட்டார்கள். கோலியும் சரியாக ஃபீல்டிங் செய்யாமல் ஒரு சமயம் ரன்களை வழங்கினார். இதையடுத்து இந்திய அணியின் ஃபீல்டிங்கை ட்விட்டரில் விமரிசனம் செய்தார் யுவ்ராஜ் சிங். அதிக கிரிக்கெட் ஆட்டங்களில் இடம்பெறுவதால் இந்திய இளம் வீரர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்கிறார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்து தொடக்க வீரர் கே.எல். ராகுலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது:

மைதானத்தின் அளவு பிரச்னையாக இல்லை. இங்கு விளக்குகள் கீழ்நிலையில் உள்ளன. இதன் வெளிச்சத்தில் பந்தைச் சரிவர பார்க்க முடிவதில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் சில சமயங்களில் கேட்சுகளை நழுவவிட்டோம். 

இந்த மைதானத்தில் பலமுறை, பல வருடங்களாக விளையாடியுள்ளோம். எனவே இங்கு என்ன எதிர்பார்ப்பது என்பது தெரியும். ஓர் அணியாக இதையெல்லாம் எங்களுடைய தவறுகளுக்கான காரணமாகச் சொல்லமாட்டோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com