மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மே.இ. - இங்கிலாந்து ஒருநாள் ஆட்டம் மழையால் ரத்து!
தொடர் மழையால் 3-வது ஒருநாள் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது...


முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நேற்றைய 3-வது ஒருநாள் ஆட்டம் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கிரனடாவில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்தமுடியாமல் போனது. டாஸ் நிகழ்வில் இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தது. தொடர் மழையால் 3-வது ஒருநாள் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
4-வது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...