வரலாறு படைக்கவுள்ளாரா விராட் கோலி?: தோனி, கங்குலியால் நிகழ்த்தமுடியாத ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றி கைக்கு அருகில்!

கங்குலிக்கு முன்பு சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோர் டெஸ்ட் தொடர்களைச் சமன் செய்துள்ளார்கள்...
வரலாறு படைக்கவுள்ளாரா விராட் கோலி?: தோனி, கங்குலியால் நிகழ்த்தமுடியாத ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றி கைக்கு அருகில்!

கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோரால் முடியாத ஒரு செயலை அடுத்த ஐந்து நாள்களில் நிகழ்த்தவுள்ளாரா விராட் கோலி?  இதுவரை எந்தவொரு இந்திய அணி கேப்டனும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்தக் குறை விரைவில் நீங்கவுள்ளதா?

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்டை வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் வெற்றி கிடைத்துவிடும். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி கண்ட முதல் இந்திய கேப்டன் என்கிற பெருமையை அடைவார் விராட் கோலி. 

2003-ல் 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்ததுதான் இந்திய அணி சமீபகாலமாக ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்திய அதிகபட்ச சாதனை. சச்சின், அனில் கும்ப்ளே, தோனி ஆகியோர் ஆஸி. மண்ணில் தோல்வியையே சந்தித்துள்ளார்கள். கங்குலிக்கு முன்பு சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோர் டெஸ்ட் தொடர்களைச் சமன் செய்துள்ளார்கள். 

ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள்

1947-48: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 1
1967-68: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 0
1977-78: ஆஸ்திரேலியா 3, இந்தியா 2, டிரா 0
1980-81: ஆஸ்திரேலியா 1, இந்தியா 1, டிரா 1 (கேப்டன் - சுனில் கவாஸ்கர்)
1985-86: ஆஸ்திரேலியா 0, இந்தியா 0, டிரா 3 (கேப்டன் - கபில் தேவ்)
1991-92: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 1
1999-2000: ஆஸ்திரேலியா 3, இந்தியா 0, டிரா 0
2003-04: ஆஸ்திரேலியா 1, இந்தியா 1, டிரா 2 (கேப்டன் - கங்குலி)
2007-08: ஆஸ்திரேலியா 2, இந்தியா 1, டிரா 1
2011-12: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 0
2014-15: ஆஸ்திரேலியா 2, இந்தியா 0, டிரா 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com