எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆடுகளத்தைப் பார்த்து எங்களுக்கு அதில் ஒன்றுமில்லை எனப் பந்துவீச்சாளர்கள் கூறுவதில்லை: வெற்றி ரகசியம் குறித்து விராட் கோலி

பந்துவீச்சாளர்கள் எப்போதும் ஆடுகளத்தைப் பார்த்து அதில் எங்களுக்குச் சாதகமாக ஒன்றுமில்லை எனக் கூறுவதில்லை. எனக்கான திட்டங்களை...

News image
Updated On :7 ஜனவரி 2019, 7:10 am

எழில்

இந்திய அணியின் சாதனை வெற்றிக்குப் பந்துவீச்சாளர்களின் மனநிலையே காரணம் என இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது இந்திய அணி. கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. 

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார்கள். இதன்பிறகு ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் மட்டும் எடுத்து ஃபோலோ ஆன் ஆனது.

2-வது இன்னிங்ஸில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 6 ரன்கள் எடுத்திருந்தது. தொடர் மழையால் இன்றும் ஆட்டம் தொடங்கவில்லை. இதையடுத்து கடைசிநாள் ஆட்டம் ரத்தானது. இதனால் 4-வது டெஸ்ட் டிரா ஆனது.

2-1 என டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் புஜாராவுக்குக் கிடைத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றி குறித்தும் பந்துவீச்சாளர்கள் குறித்தும் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

சமீபத்திய வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது அற்புதம்.  வெளிநாடுகளில் நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்டு இதுபோல முடிவுகள் கிடைப்பதை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. அவர்களுடைய உடற்தகுதிகளுக்கும் மனநிலைகளுக்கும் பாராட்டுகள். 

பந்துவீச்சாளர்கள் எப்போதும் ஆடுகளத்தைப் பார்த்து அதில் எங்களுக்குச் சாதகமாக ஒன்றுமில்லை எனக் கூறுவதில்லை. எனக்கான திட்டங்களை அவர்கள் முடிவு செய்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு மிகப்பெரிய மாற்றம். இந்தியாவில் விளையாடும் பந்துவீச்சாளர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த மனநிலையைக் கற்றுக்கொள்ளவேண்டும். இந்திய அணிப் பந்துவீச்சாளர்களைக் குறிப்பிட்டு பல காலம் பேசப்போகிறார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களின் சாதனையை முறியடிப்பது சாதாரண விஷயமல்ல. அவர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.