ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய அணி.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி 2019 நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு 4-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ள இந்தியா குரூப் ஏ பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 4-1 என அபாரமாக வீழ்த்தியது. பின்னர் யுஏஇ அணியிடம் 2-1 என தோல்வியடைந்தது.
நாக் அவுட் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திங்கள்கிழமை இரவு கடைசி ஆட்டத்தில் பஹ்ரைன் அணியுடன் மோதியது இந்தியா. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், பஹ்ரைன் அணி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்தியாவின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை.
எனினும் கூடுதல் நேரத்தில் பஹ்ரைன் வீரர் ஜமார் ரஷீத் அடித்த ஓரே கோல் வெற்றி கோலாக மாறியது.
யுஏஇ-தாய்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்ததால், இந்திய அணி வெறும் 3 புள்ளிகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. யுஏஇ, பஹ்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


