/

ஐசிசி அமைப்பின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியின் பெயர் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக மனு சாவ்னே தேர்வாகியுள்ளார்... 

News image
Updated On :16 ஜனவரி 2019, 7:27 am

எழில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக மனு சாவ்னே தேர்வாகியுள்ளார். 

மனு, பிப்ரவரி முதல் பணியில் இணையவுள்ளார். எனினும் ஜூலையில்தான் தனக்கான பதவியில் அதிகாரபூர்வமாக அமர்த்தப்படவுள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டேவிட் ரிச்சர்ட்சன் பதவியிலிருந்து விலகவுள்ளார். அவருக்குப் பிறகு மனு,  அப்பதவியை வகிக்கவுள்ளார். 

ஈஎஸ்பிஎன் - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 17 வருடங்கள் பணிபுரிந்த இந்தியாவில் பிறந்தவரான மனு, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.