/

ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த நியூஸிலாந்து அணியிலிருந்து இரு வீரர்கள் நீக்கம்!

மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளையாவது அடைய புதிய முயற்சியில் இறங்கியுள்ளது நியூஸிலாந்து அணி... 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:59 am

எழில்

மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - நியூஸிலாந்து ஒருநாள் தொடர், சிறிதும் சுவாரசியமின்றி இந்திய அணிக்குச் சாதகமாகத் திரும்பியுள்ளது. இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள இரு ஆட்டங்களுக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளையாவது அடைய புதிய முயற்சியில் இறங்கியுள்ளது நியூஸிலாந்து அணி.

டக் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகிய இரு வீரர்களும் நீக்கப்பட்டு, ஜேம்ஸ் நீஷம், டாட் ஆஸ்லே ஆகிய இரு வீரர்கள் நியூஸிலாந்து அணியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

காயம் காரணமாக முதல் மூன்று ஆட்டங்களிலும் இடம்பெறாமல் இருந்த ஜேம்ஸ் நீஷம், குணமாகி, மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். இதுவரை 44 ஒருநாள் ஆட்டங்களில் ஜேம்ஸ் நீஷமும் ஆறு ஆட்டங்களில் ஆஸ்லேவும் விளையாடியுள்ளார்கள்.

4-வது ஒருநாள் ஆட்டம் வரும் 31 அன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.