தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொடர் ரன் வேட்டை: இந்திய அணியின் கதவைத் தட்டும் இளம் சிஎஸ்கே வீரர்!

இவருடைய நல்ல ஃபார்ம், சிஎஸ்கே அணிக்கும் நல்ல செய்திதான்...

News image
Updated On :22 ஜூலை 2019, 9:58 am

எழில்

இந்திய அணிக்குள் நுழைய கடும் போட்டி நிலவுகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும்  ஷுப்மன் கில்லுகே இடமில்லை. எனினும் மற்றொரு இளம் வீரர் இந்திய அணியின் கதவைத் தட்டிக்கொண்டிருகிறார். அவர் எந்நேரம் வேண்டுமானாலும் இந்திய அணிக்குள் நுழையலாம் என்கிற அளவுக்கு அபாரமான ஃபார்மில் உள்ளார்.

மஹாரஷ்டிராவைச் சேர்ந்த 22 வயத் ருதுராஜ் கெயிக்வாடை இந்த வருடம் ஏலத்தில் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி, ரூ. 20 லட்சத்துக்கு. இந்நிலையில் இந்திய ஏ அணியில் தொடக்க வீரராக இடம்பெற்று வரும் ருதுராஜ் அபாரமாக விளையாடி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசக்கூடிய நபராக உள்ளார்.

கடந்த இரு மாதங்களில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு எதிராக ருதுராஜ் கெயிக்வாட் எடுத்துள்ள ரன்கள்:

187* (136)
125* (94)
84 (59)
74 (73)
3 (10)
85 (102)
20 (17)
99 (89) - நேற்றைய ஆட்டம் 

மொத்தமாக 677 ரன்கள், சராசரி - 112.83, ஸ்டிரைக் ரேட் - 116.72. 

இந்திய ஒருநாள் அணியில் ஏற்கெனவே ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ராகுல், ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாகச் சமீபத்தில் விளையாடி வருகிறார்கள். இதுதவிர மயங்க் அகர்வால், பிருத்வி ஷாவும் அடுத்த வரிசையில் உள்ளார்கள். இந்நிலையில் ருதுராஜும் இந்தப் போட்டியில் தற்போது இணைந்துள்ளார். ரோஹித் சர்மா, தவன் ஆகிய இருவரில் ஒருவர் ஓய்வு எடுத்தாலோ, காயம் காரணமாக விலகினாலோ ருதுராஜை இந்திய அணிக்குள் நுழைக்க வாய்ப்புண்டு.

மேலும் இவருடைய நல்ல ஃபார்ம், சிஎஸ்கே அணிக்கும் நல்ல செய்திதான். அடுத்த வருட ஐபிஎல்-லில் ருதுராஜ், சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.