செக்.குடியரசின் பிராக் நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திரம் ஹிமா தாஸ், ஓரே மாதத்தில் 5-ஆவது தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
பி.டி. உஷாவுக்கு அடுத்து தடகள ஓட்டப்பந்தயத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர் அஸ்ஸாமின் இளம் வீராங்கனை ஹிமா தாஸ். பிராகில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். தபோர் போட்டியில் 200 மீ.இல் தங்கம் வென்றார்.
மேலும் கிளாட்னோ போட்டி, குண்டோ தடகளப் போட்டி, போன்ஸான் தடகள கிராண்ட்ப்ரீ என சர்வதேச போட்டிகளில் மொத்தம் 5 தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், ஹிமா தாஸ் வெளியிட்ட விடியோப் பதிவில் கூறியதாவது:
சர்வதேசப் போட்டிகளில் 5 தங்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் எனது ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொண்டு வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் தொடரில் சாதிப்பது தான் எனது இலக்கு. அதற்காக தயாராகும் விதமாக இப்போட்டிகளை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.
நான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்க உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், ஆசிர்வாதமும் தேவை. என்னை தொடர்ந்து வாழ்த்துங்கள் என்று தெரிவித்தார்.
#WATCH Poland: Sprinter Hima Das thanks people after winning 5 gold medals in different international championships this month. She says "These were warm up watches. I'm focussing on big championships like World Championship. Keep wishing&blessing me,I'll continue to perform well pic.twitter.com/zUiZyCljoh
â ANI (@ANI) July 22, 2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு சட்டப்பேரவை 2026: காரசார விவாதம் - நேரலை!

தமிழ்நாடு வனப்பகுதி அனுபவங்கள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக 900 கோடி வாங்கியதா? Udhayanidhi vs Aadhav Arjuna

ஓடிடியில் வெளியானது நூறு சாமி திரைப்படம்!
விடியோக்கள்



