புவனேஸ்வர் குமார் தான் அநத்ப பணிக்கு என்று ஏற்கனவே தெளிவாக முடிவெடுத்துவிட்டதாக பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ஜஸ்ப்ரீத் பும்ரா உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் அவருடைய பந்துவீசும் தரம் வியக்க வைக்கிறது. அவரைப் போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் போன்றது.
அதேபோன்று குல்தீப் யாதவ் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர், அரிய திறமையை உடையவர். பேட்ஸ்மேன்களைப் போன்று பந்துவீச்சாளர்களும் அவ்வப்போது சரியாக பங்களிப்பு வழங்க இயலாமல் திணறுவார்கள். அதுபோன்ற நேரங்களில் கடந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட வீரர் சாதித்துள்ளதை நினைவுகூறச் செய்வது தான் எனது முதல் பணி.
சில நேரங்களில் தங்கள் அடிப்படைகளை விட்டு சிறிது விலகிச் செல்வார்கள். அதுபோன்ற வீரர்களுக்கு சரியான பாதையை காண்பித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஐபிஎல் சறுக்கலுக்குப் பின்னர் குல்தீப் யாதவ் தற்போது மீண்டும் தனது திறமைகளை அடையாளம் கண்டுகொண்டு சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில், பும்ரா தான் முதன்மையானவர். அவருடன் முகமது ஷமி பல போட்டிகளில் களமிறங்கி சாதித்துள்ளார். முகமது ஷமியும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் தான். ஆனால், உலகக் கோப்பைக்கு முன்னதாகவே புவனேஸ்வர் குமார் தான் பும்ரா உடன் இணைந்து பந்துவீசுவார் என்று நாங்கள் தெளிவாக திட்டமிட்டு முடிவெடுத்தோம்.
ஏனென்றால் இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்து ஸ்விங் ஆகும். அதில் புவனேஸ்வர் கைதேர்ந்தவர். எனவே பும்ராவும் புவனேஸ்வரும் தான் இந்திய வேகப்பந்துவீச்சு ஜோடி என்பதை தீர்மானித்தோம். இந்த தொடரில் ஷமிக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய சா்ஃப்பிங்: சிவராஜ், கமலி மூா்த்திக்கு பட்டம்!

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


